Sunday 24 May 2015

எங்கு சென்றாய் காதலி?

எந்த பூவாய் 
எங்கே பூத்தாய்=ஏன் 
என்னை மட்டும் 
ஏங்க சபித்தாய்............... 

எந்த ஊரில் 
எழிலாய் நிலைத்தாய்=ஏன் 
ஏழை என்னை 
எரிதழலில் விதைத்தாய்.......... 

முல்லை கொடியே 
முகமெங்கே மறைத்தாய்=என் 
மூச்சை திருடியேன் 
முந்தானையில் முடித்தாய்.......... 

மஞ்சள் பூவே 
மாமன் மகளே 
மறுபடி=எப்போது 
பார்த்திடுவோம்? 

நிலவின் நிலவே 
நீங்கா உறவே 
நின்மடி=எப்போது 
சேர்ந்திடுவேன்........... 
=================

No comments:

Post a Comment

சடையன் பெயர்