Sunday 24 May 2015

காதல் என்னை வதைக்கிறதே...........

 

உள்ளே உள்ளே 
உந்தன் நினைவு 
உயிரை=சென்று 
பிளக்கிறதே............ 

அன்பே அன்பே 
ஆயிரம் கனவு 
ஆயுளை=சென்று 
அளக்கிறதே........... 

பேசி பழக 
பொங்கும் எண்ணம் 
பொறுமை நிரம்பி 
வெடிக்கிறதே........... 

ஆசை முகத்தை 
ஆரத் தழுவ=மனம் 
ஆவல் கண்டு 
துடிக்கிறதே........... 

கொஞ்சு மொழியில் 
கொஞ்சம் கேக்க=நான் 
கொண்ட இதயம் 
அடிக்கிறதே........... 

நாணச் சிரிப்பில் 
நணைந்து எழும்ப=என் 
நாடி நரம்புகள் 
விறைக்கிறதே............. 
===================

No comments:

Post a Comment

சடையன் பெயர்