பற்றிகொண்ட தீ!
கிழக்கில் தொடங்கி
மேற்குவரையிலும்
தினமும்
தீயினால்
கருகுகின்றது வானம்!!!
தீக்கரைகள்
திட்டு திட்டாய்
ஆங்காங்கே
நகர்ந்து செல்கின்றன!!!
இரவிலும்
எண்ண முடியாதபடி
எத்தனையோ
குடிசைகள் எரிக்கப்படுகின்றன!!!
இதில்
நிதம் எரியும்
நிர்பந்தத்தில்
நிலவு!!!
இவ்வளவு
வெப்பத்திலும்
இந்த மேகங்கள்
எங்கே
குளிர்ச்சி பெருகின்றன!!!
கொழுந்துவிட்டு
எரிவதால்
சூழ்ந்துகொண்ட
கரும்புகைதான் இரவோ!!!
இங்கிருந்துதான்
சாம்பல்களாய்
பறந்துவந்து
புவியில்
படிகின்றனவோ வெண்பனிகள்!!!
வானவர்கள்
வைத்திருந்த
வைரங்கள்தான்
உருகி மழையாய்
வருகின்றதோ!!!
அங்கே
இருக்கின்ற மின்சார
கிடங்குகள்
வெடிப்பதுதான்
மின்னலாய் தெரிகின்றதோ!!!
மழை
நின்றவுடன்
மண்ணில் வீசும்
வாசனைதான்
கருகிபோனதறக்கு சாட்சியோ!!!
இந்த
சூரியனுக்கு
தீவைத்தவர்கள்
யாரோ!!!
இன்றும்
அணையாமல்
அனுமனின்
பற்றியவாலாய்
அலைகின்றதே!!!
====================
No comments:
Post a Comment
சடையன் பெயர்