Sunday 24 May 2015

இவைகளுமா என்னை ஏமாற்றியது?

 

கவிதை நடையில் 
எழுதிய 
கடிதங்கள்........... 

கடித நடையில் 
எழுதிய 
கவிதைகள்........... 

அன்பாய் 
செய்த 
அலைகழிப்புகள்............ 

இனிதாய் 
உமிழ்ந்த 
வசைபாடுகள்............ 

செல்லமாய் 
கிள்ளிய 
வலிகள்....................... 

திட்டமிட்டு 
பெற்ற 
தோல்விகள்............... 

அமைதியாக்கிய 
உந்தன் 
பேச்சுகள்................ 

எல்லாம் 
எங்கே 
சென்றுவிட்டன?? 

நீதான் 
ஏமாற்றினாய், 
இவைகளுமா?
==============

No comments:

Post a Comment

சடையன் பெயர்