Sunday 24 May 2015

இதயம் கிடைக்குமா?

 

இதயம்  கிடைக்குமா??

கடலில் பிறந்த 
உயிரிகளாய் 
நான் 
தாகமாய் இருக்கின்றேன்............. 

கண்ணாடியில் 
ஒட்டிய உருவமாக 
நான் 
முகம்பார்க்க முடியாமல் 
முனகுகின்றேன்....................... 

வானத்து நிலவுபோல 
நான் 
தனக்கென்று 
ஒரு 
நிலவின்றி தவிக்கின்றேன்............ 

வானம்பார்த்து 
பூத்த பூவாக 
நான் 
புவியை காண 
விரும்புகின்றேன்................. 

கடலில் கலந்த 
துளியாக 
நான் 
கரையில்சேர 
நினைக்கின்றேன்..................... 

எல்லாவற்றையும் 
பாடுகின்ற 
ஒலிபெருக்கி நான்.................... 

எனக்காக 
ஒரு 
பாடலை 
ஒலித்துக்கொள்ள 
ஓடி வருகின்றேன்.................. 

தண்ணீரில் 
பூத்திருக்கும் 
தாமரை நான்.......................... 

நான் 
மட்டும் சற்றே 
தன்ணீரின் மேலே 
இருக்க 
இயம்புகின்றேன்............. 

என் 
இதயத்தை கொடுக்க 
இன்னொரு 
இதயத்தை கேட்கின்றேன்................. 
================================

No comments:

Post a Comment

சடையன் பெயர்