Monday 25 May 2015

  என்ன செய்வோம்.......


           ஒரு கிராமத்தின் கடைசி மனிதனின் கண்ணீர் இப்படித்தான் பெருக்கெடுக்கின்றது. குட்டையாக,குளமாக.....நதியாக,நானிலமே பரந்து விரிந்த கடலாக.......விவசாயிகளின் வாழ்வே சூனியமான இந்த தேசத்தில் விவசாய கூலிகள் என்ன செய்வார்கள்.............?

வெள்ளாறு காஞ்சிருக்கு
வெதநெல்லு காத்திருக்கு
வெள்ளாம செய்யாம,
வெகுமக்கள் பசிகிடக்கு...

வாய்கால் வத்திருக்கு
வானமும் வாடிருக்கு
வயித்த வற்றவிட,
வஞ்சனையும் தொடங்கிருக்கு..

எலிகளும் கொறஞ்சிருக்கு
ஏமாற்றமே நெறஞ்சிருக்கு
எல்லா தும்பங்களும்
எங்களுக்கே நடந்திருக்கு....

வெஞ்சிட்டா பொறந்தாலும்
வெளஞ்சயிடம் போயிடலாம்
வெறுமிடத்தில் பொறந்ததால
வெளியசொல்ல முடியலயே....

புல்லும் புளுகிடுச்சு
புண்ணாக்கு தீந்திடுச்சு
வைக்கோலும் ஆனதால
மாடுகூட சோந்திடுச்சி...

சனிக்கெழம சந்தையில
மாட்டயும்   வித்தாச்சு
குப்பமோடும் வித்துதுபுட்டு
குடும்பமே  படுத்தாச்சு..

அண்டாகுண்டா அடவுவச்சி
ஆனமுட்டும் செய்தாச்சி
ஆண்டவனே அழுததால
ஆவியாக துணிஞ்சாச்சு...

No comments:

Post a Comment

சடையன் பெயர்