Monday 25 May 2015

சுனாமியில் கருகிய காதல்....

 

கரைதாண்டி வந்தெந்தன் 
காதலி கொன்றாய்=நான் 
கண்மூடி திறப்பதற்குள் 
காதலைத் திண்றாய்............ 

இதயத்தை அறுத்துவிட்டு 
உடலையேன் விட்டாய்=என் 
ஈரலை மணலில்வைத்து 
உப்புநீரால் சுட்டாய்........ 

கிளிஞ்சல்கள் தேடியெந்தன் 
முத்தரசி கூட்டிவந்தேன்=நீ 
கிழிசலை தைத்துகொள்ள 
முத்தூசி செய்தாயே....... 

அலைமடியில் தூளியாட 
ஆலங்கிளி அழைத்துவந்தேன்=நீ 
அவசரமாய் அகோரமாய் 
அதையள்ளி புதைத்தாயே.... 

அடுத்தகரை பார்த்துவர 
ஆசைகளை சேர்த்துவந்தேன்=நீ 
அர்த்தமற்று கரைதாண்டி 
அன்பவளை குடித்தாயே...... 

பிறந்தவுடன் சூரியனே 
மேல்நோக்கி போகின்றான் 
பெற்றவளே நீமட்டும் 
மண்பார்க்க வந்ததென்ன..... 

திமிங்கல சுராகூட 
இரைதேடி வரவில்லை=நீ 
திண்பதற்கு இயற்கையிலும் 
இங்கொன்றும் முளைக்கலியே... 

மீனள்ளி வந்துதானே 
வயிர்கழுவி வாழ்கின்றோம்=நீ 
மீதமுள்ள உயிர்வாழ 
மீண்டும்மொரு வழியசொல்லு.... 

அவளின்றி நானொன்றும் 
உயிர்வாழ முடியாது=இதோ 
அவளோடு செர்த்துவிடு 
என்னோடு உலகைவிடு......... 
===========================

No comments:

Post a Comment

சடையன் பெயர்