Monday 25 May 2015

முதிர்கன்னி

 

பூவெல்லாம் 
காயாச்சி=நான் 
பூப்பெய்தி 
          காலமாச்சி............

எனக்குபின்
மொளச்சதெல்லாம்=மண்ணில் 
எப்பொழுதே 
          மரமாச்சி.......... 

எல்லாமே 
பணமாச்சி=மனம் 
எருக்குச்செடி 
பூவாச்சி....

எருக்கம்பால் 
மறந்துடுச்சி=என்ன 
எடுத்துபோட்ட 
மருத்துவச்சி....

கல்லெல்லாம் 
சிலையாச்சி=என் 
கனவெல்லாம் 
சிறையாச்சி....

கண்முன்னே 
பிறந்ததெல்லாம்=தக்க 
காலத்துல 
பயிராச்சி.....

பெண்மையே 
வறண்டாச்சி=என்ன 
பெற்றவர்க்கும் 
வயதாச்சி.......

இன்னமும் 
பொறக்கலயோ=என் 
இளமைகேத்த 
புழுபூச்சி.....
================

No comments:

Post a Comment

சடையன் பெயர்