Sunday, 24 May 2015

அனுமதி!! அன்பே அனுமதி!!!

 

நான் 
நதியாகும்போது=உன்னை 
கரையாக்கிக்கொள்ள............... 

நான் 
குயிலாகும்போது=உன்னை 
குரலாக்கிக்கொள்ள................. 

நான் 
இரவாகும்போது=உன்னை 
நிலவாக்கிக்கொள்ள................... 

அனுமதி 
அன்பே=என்னை 
அனுமதி.................... 
************************************ 

உன் 
மூச்சுவிடும் வெப்பத்தில்=நான் 
சூடாகிக்கொள்ள................ 

உன் 
பேச்சுவரும் வாக்கியத்தில்=நான் 
வார்த்தையாகிக்கொள்ள................ 

உன் 
வெட்கம்தொடும் நேரங்களில்=நான் 
எல்லையாகிக்கொள்ள................ 


அனுமதி 
அன்பே=என்னை 
அனுமதி................. 
******************************************************** 

அதிகாலை 
தென்றலால்=உன்னை 
அபிசேகம் செய்ய............. 

எழில்சோலை 
பூக்களால்=உன்னை 
எல்லோரா தீட்ட................... 

அந்திமாலை 
அழகுகளில்=உன்னை 
ஆழ்த்திநான் எடுக்க................. 

அனுமதி 
அன்பே=என்னை 
அனுமதி................ 
*********************************************** 

காதோரம் 
ரகசியமாய்=சில 
கவிதைகளை சொல்ல............... 

இதழ்சிந்தும் 
தேன்துளியை=நான் 
பருகிக்கொள்ள............ 

உன்வடிவ 
மதுக்குவளையை=நான் 
உரசி மயங்க.................. 

அனுமதி 
அன்பே=என்னை 
அனுமதி................. 
**********************************************

No comments:

Post a Comment

சடையன் பெயர்