Sunday, 24 May 2015

அடிமை சாதியும் அறிவியல் பாதையும்

 

கம்பியூட்டரு 
காலத்திலும் =எங்க 
காலுல செருப்பில்ல…… 

கருப்புசாமி 
கோயிலுக்கும் =எங்க 
கையால சூடமில்ல…………. 

காலமாறி 
போனாலும் =நாங்க 
கைகட்டி நிக்கும்நில………….. 

பொழுதெல்லாம் 
உழச்சாலும் =எங்க 
பொழப்புக்கு போதவில்ல………. 

தலையெல்லாம் 
நரச்சாலும் =எங்க 
தலமுறைக்கு ஓய்வில்ல……… 

அறிவியலே 
நெனச்சாலும் =எங்க 
அடிமநில மாறவில்ல…………… 

ஆயிரமே 
படிச்சாலும் =எங்க 
அப்பழுக்கு போகவில்ல………….. 

தண்ணிவரா 
சேரிக்குள்ள =ஊர் 
நெருப்புவந்து எரிப்பதென்ன……………. 

ஆண்டவரா 
தெருவுக்குள்ள =எங்க 
அடிமசாதி கெடப்பதென்ன………… 

பன்னியினும் 
கேவலமாய் =எங்க 
பறம்பறையே படுவதென்ன…………….. 

அரசாங்க 
இலவசங்க =எங்க 
அடிவயிற அடிப்பதென்ன…………….. 

சாதிக்கு 
சர்ட்டிகெட்ட =நாங்க 
சாவும்போது கொடுப்பதென்ன…….. 

சாவுக்கு 
பறையடிக்க =நாங்க 
சல்லிகாசு பெறுவதென்ன………………. 

மீந்துபோன 
சோத்துக்கு =நாங்க 
தூக்குவட்டா எடுப்பதென்ன……………. 

வானமென்ன 
பூமியென்ன =நாங்க 
வந்தவிதி கோலமென்ன……… 

நாடால 
சட்டங்கல =எங்க 
பாட்டனெழுதி பயனுமென்ன………… 
@

No comments:

Post a Comment

சடையன் பெயர்