வருமா வல்லரசு?
தேசிய கீதத்தின்
வரிகளை வைத்துக்கொண்டு
அர்த்தங்களை
தொலைத்துவிட்டோம்.....
கம்பங்களிளெல்லாம்
கட்சிகொடிகளை ஏற்றிவிட்டு
வருடத்தில் இரண்டுமுறை
கொடியேற்றி அவிழ்க்கின்றோம்...
நம்
தேசக்கொடியின்
வெள்ளைநிற இடமெல்லாம்
சிவப்படித்துவிட்டோம்...
ஆளுக்கொரு திசையில்
ஆரங்களை இழுத்ததில்
அசோகச்சக்கரம்
இடமாறிவிட்டது.....
பச்சைகளை முதலாளிகள்
பங்கிட்டுகொண்டதில்
பாட்டாளிகளெல்லாம்
பசிக்கு பறக்கிறார்கள்....
இந்தியத் தாயின்
அணிகலன்களெல்லாம்
ஆயுதங்கள் வாங்குவதற்கு
அடகில் கிடக்கின்றது....
சாதிமத சண்டைகளின்
முதுகினில் அமர்ந்து
ஜனநாயகம்
சவாரி செய்கின்றது....
ராக்கெட்டில் பயணிக்கும்
வல்லரசை பிடித்துவர
மர்க்கெட்டில் மாடுவாங்கும்
மமதையில் நாமெல்லாம்...
========================
வரிகளை வைத்துக்கொண்டு
அர்த்தங்களை
தொலைத்துவிட்டோம்.....
கம்பங்களிளெல்லாம்
கட்சிகொடிகளை ஏற்றிவிட்டு
வருடத்தில் இரண்டுமுறை
கொடியேற்றி அவிழ்க்கின்றோம்...
நம்
தேசக்கொடியின்
வெள்ளைநிற இடமெல்லாம்
சிவப்படித்துவிட்டோம்...
ஆளுக்கொரு திசையில்
ஆரங்களை இழுத்ததில்
அசோகச்சக்கரம்
இடமாறிவிட்டது.....
பச்சைகளை முதலாளிகள்
பங்கிட்டுகொண்டதில்
பாட்டாளிகளெல்லாம்
பசிக்கு பறக்கிறார்கள்....
இந்தியத் தாயின்
அணிகலன்களெல்லாம்
ஆயுதங்கள் வாங்குவதற்கு
அடகில் கிடக்கின்றது....
சாதிமத சண்டைகளின்
முதுகினில் அமர்ந்து
ஜனநாயகம்
சவாரி செய்கின்றது....
ராக்கெட்டில் பயணிக்கும்
வல்லரசை பிடித்துவர
மர்க்கெட்டில் மாடுவாங்கும்
மமதையில் நாமெல்லாம்...
========================
No comments:
Post a Comment
சடையன் பெயர்