Monday 25 May 2015

காதலன்..

 

வைத்தவுடன் 
உதிர்ந்துவிட்டது=அவன் 
வாங்கிதந்த ரோசாபூ... 

அணியும்போதே 
உடைந்துவிட்டது=அவன் 
அனுப்பிவைத்த வலையல்... 

நெற்றியையே 
மறைக்கின்றது=அவன் 
கைதினித்த பொட்டு... 

இரண்டே நாளில் 
நின்றுவிட்டது=அவன் 
அன்பாய்தந்த கடிகாரம்... 

முந்தானையே 
இருக்கவில்லை=அவன் 
சங்குபோட்ட சேலை... 

நகத்திலேயே 
ஒட்டவில்லை=அவன் 
பூசிவிட்ட நகபூச்சு... 

கழுத்தையே 
அரிக்கின்றது=அவன் 
கட்டிவிட்ட பாசிமணி... 

காப்பியடித்த 
கவிதைதானாம்=அவன் 
கடிதங்களில் இருந்தது... 

எல்லாம் 
தெரிந்தும்கூட=நான் 
நம்பிக்கையோடே இருக்கின்றேன்... 

என் 
வழ்கையை வாங்கி=அவன் 
தருவானென்று.... 


No comments:

Post a Comment

சடையன் பெயர்