Sunday 24 May 2015

இனி வெளிநாடு போகமாட்டேன்...........

 

மழை விழும் 
நேரம்=நாம் 
ஜன்னலின் 
ஓரம்........... 

துருபித்த 
கம்பிகள்=உன் 
கரம்பிடித்ததால், 

மதுகுடித்த 
மனிதன்போல்=சற்றே 
மயங்கிக் கிடந்தன.......... 

திடீரென 
தீண்டின=நம்மை 
திரலொளி மின்னல்கள்......... 

கலக்கத்தில் 
கட்டியனைக்கும் வேகத்தில்=நீ 
கைகளால் முகம்மூடினாய்............. 

ஒவ்வொரு 
முத்தத்தின் முடிவிலும்=நாம் 
மெதுவாய் இமைதிறப்பதுபோல, 

நீ 
முகம் திறந்து=உன் 
பயம் விரட்டினாய்.............. 

மஞ்சள்குளித்த 
மறுநிமிடம்போல்=உன் 
கைகளும், முகமும் 
கம்பித்துகள் பூசியிருந்தன........ 

முகம்துடைக்க=உன் 
முந்தானையிடம் 
முன்மொழிந்தேன்............ 

உன் 
முந்தானை 
இடம்பெயர்ந்ததில், 

என் 
முத்தங்கள்=தங்கள் 
முடிச்சுகளை 
அறுத்துகொண்டு, 

உன் 
உடலின் செழுமையை 
முழுமையாய் 
மேய்ந்தன.................. 

சாரல்துளிகள் 
ஜன்னலில் 
பார்ப்பதை=ஏனோ 
மறந்துவிட்டோம்............ 

முதல் 
கலவிபோல்=நாம் 
முழுபலத்துடன் 
முண்டியடித்துக்கொண்டோம்........... 

ஏனோ 
எப்போதும் இல்லாமல்=நீ 
அப்போதுமட்டும் 
ஆறுக்கும் அதிகமாய் 
பற்குறிகளிட்டாய்............... 

நீ 
பயந்து பயந்து 
என்னை 
தொடுபவள், 

ஏனோ 
பாய்ந்து,பாய்ந்து 
என்னைபற்றிக்கொண்டாய்................ 

இல்லறத்தில் 
இருந்த 
இருபதாண்டுகளில்=நீ 
இப்போதுதான் 
இருக்கமாய் அணைக்கின்றாய்.............. 

ஜன்னல்வரும் 
இடியோசையை தாண்டி=நாம் 
இருக்கமாய் 
தழுவிக்கொண்டிருந்தோம்................... 

ஆம்! 
அன்பே=நான் 
இந்தமுறை மட்டுமல்ல, 

இனி எப்போதும் 
உன்னைவிட்டு 
வெளிநாடு 
செல்வதாய் இல்லை.............. 
======================

No comments:

Post a Comment

சடையன் பெயர்