Sunday, 24 May 2015

வரலாற்றை மிரட்டுங்கள்........

 

அன்பு காதலை 
ஆதரியுங்கள்........ 
அழகு கவர்ச்சிகளை 
அவிழ்த்தெரியுங்கள்......... 

இன்ப கனவுகளில் 
காதல்செய்யுங்கல்....... 
இதய துடிப்புகளை 
இணைந்துயெண்ணுங்கள்............. 

ஆழமாய் அன்பு 
கன்றை நடுங்கள்........... 
மனதைதீண்டி நித்தம் 
நீரைவிடுங்கள்.............. 

சுமையை தாங்க 
பயிற்சியெடுங்கள்........... 
துன்பம் ஏற்க 
பழகிகொள்ளுங்கள்.............. 

ஆசைகள் அத்தனையும் 
அளவாக்குங்கள்........... 
ஆணவம் அழிந்துபோக 
ஆணையிடுங்கள்.............. 

பாலையும் பூக்குமாறு 
பாசபடுங்கள்............... 
பாவிகள் பார்த்தாலும் 
பரிவுபடுங்கள்.................. 

குருதிகள் உறைந்துபோக 
உணர்வுபடுங்கள்............. 
குற்றங்கள் குறைந்துபோக 
குணத்தைவையுங்கள்............ 

வானத்து நீலந்தீர 
எழுதபண்ணுங்கள்.......... 
வரலாறு மிரண்டுபோக 
வாழ்ந்துநில்லுங்கள்............ 
=====================

No comments:

Post a Comment

சடையன் பெயர்