Monday 25 May 2015

கருப்பாயி

 

கருப்பங் காடுகளின் 
காய்ந்த சருகுகளில் 
ஈரமாய் தெரிகின்றது=என்னை 
ஈன்றவளின் கால்தடம்..... 

கால்தடத்தின் ஈரத்திலும் 
கஞ்சிபானை ஓரத்திலும் 
பிசுபிசுக்கின்றது=இந்த 
பிரபஞ்சத்தின் மொத்தவறுமை.... 

கொளுத்தும் வெயிலில் 
பற்றிகொள்ளவில்லை 
கொடுமையில் வெடித்த=இவள் 
பஞ்சு தேகம்........ 

கடற்கறை மணல்களின்றி 
கரும்புக்காட்டின் நடுவில் 
காய்கின்றாள்=தினம் 
உப்புபூக்க கருவாடாய்.... 

கட்டி போடுகின்ற 
கரும்புக் கட்டுகளில் 
இனிப்புகள் இருப்பதை=இவள் 
சுவைத்ததே இல்லை.... 

பாலைவணத்தின் 
வெடித்த பகுதிகளை 
பாதங்களில்=இவள் 
தொகுத்து வைத்திருக்கின்றாள்... 

பணக்கட்டு கல்லூரியில் 
கரும்புகாட்டு காசுகளால்=என்னை 
படிக்க வைத்த 
என்தாய் கருப்பாயி... 

பணம் கொடுத்து 
பாசம் பேசயில் 
பீறிட்டு அழுதது=என் 
பிஎ தமிழ்..... 
============

No comments:

Post a Comment

சடையன் பெயர்