Monday 25 May 2015

மீண்டும் சந்திப்போமா.....

 

வங்கக் கடற்கரை 
மணலில் =உன் 
காலடி பரப்பின் 
நடுவில்...... 

நான் 
எழுதிவைத்த கடிதமும்.... 
எழுதிகொண்ட கவிகளும்.... 

உன்னை 
தொட்டுச்சென்ற அலைகலை=நான் 
துரத்தியதும்... 
முத்தமிட்டதும்..... 

உன் 
சிரிப்பொலி கிளிஞ்சல்களை=நான் 
ரசித்ததும்..... 
எடுத்ததும்... 

நீ 
துரத்திய நண்டுகளை=நான் 
துளைபோட்டு தோற்றதும்.... 
துவண்டுதுவண்டு களைத்ததும்...... 

உன் 
ஆறாம் விரலாய் 
ஐஸ்கிரீம் இருக்க=நான் 
சுவைக்கப்பட்டதும்.... 
கரைந்துபோனதும்...... 

உன் 
மீனான கண்கள் 
மீன்களைப் பார்க்க=நான் 
வழுவழுத்ததும்..... 
துள்ளிகுதித்ததும்..... 

நீ 
கைநீட்டி காட்டிய 
ஒவ்வொரு படகுமாய்=நான் 
தவழ்ந்ததும்..... 
தத்தளித்ததும்.... 

உன் 
ஈரமான ஆடைகளை 
உலர்த்தியபோது=நான் 
உலர்ந்ததும்... 
உணர்ந்ததும்....... 

உன் 
கூந்தலின் வழியே 
நீர்துளி வழிந்தபோது=நான் 
குளிர்ந்ததும்.... 
துளிர்த்ததும்.... 

உன் 
பொட்டழிந்த நெற்றிகாய்=நான் 
போராடியதும்... 
பொறுமையிழந்ததும்.... 

உன் 
குடும்பத்தாருடன் 
நீ கிளம்பியபோது=நான் 
கிளம்பியதும்.... 
தேம்பியதும்..... 

உனக்கும் 
தெரியுமா 
தேவதையே=அந்த 
அந்திமாலை பொழுதுகளும்...... 
ஆழிமகள் பார்வைகளும்...... 

நம்மைத்தான் 
கவனித்தன=நாம் 
மீண்டும் சந்திக்கவேண்டுமென 
தியாணித்தன..... 



No comments:

Post a Comment

சடையன் பெயர்