Monday 25 May 2015

பெண்ணாக பிறந்துவிட்டேன்...

           
பெண்ணாக பிறந்துவிட்டால் எதையுமே செய்ய முடியாது என்ற நிலமை இன்றைக்கும் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றது.அதனை மாற்றி பெண்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும், அவர்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும். கார்க்கி,மைத்ரேயி,ஒளவையார் போன்ற கல்வியில் சிறந்த சங்ககால பெண்களைப்போல நம் பெண்களையும் உருவாக்க வேண்டும். இல்லையென்றால் இந்த பெண்ணைப்போலத்தான் உள்ளம் உருகுலையவேண்டிவரும்.


ஆற்று பாலந்தனில்
அனுதினமும்
நிற்காதே...

அடிக்கடி பின்வந்து
அழவைத்து
போகாதே.....

அரளிப்பூ என்மேலே
அன்புவைத்து
நோகாதே...

பார்த்தவர்கள் அடித்துவிட்டால்
பாவிநெஞ்சம்
தாங்காதே....

உச்சி வெயில்நின்று
உப்பாக
கரையாதே....

எனக்கும் உன்மேலே
அன்பிருக்கு
மறவாதே....

என்னை தாளிகட்ட
ஆளிருக்கு
அலையாதே....

அத்திமரம் நானானேன்
பூபறிக்க
பார்க்காதே....

பெண்ணாக பிறந்துவிட்டேன்
குடும்பத்தைநான்
என்ன  செய்ய..........

No comments:

Post a Comment

சடையன் பெயர்